Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெங்களூரில் அலுவலகம் திறந்த அமெரிக்க முதலீட்டு நிறுவனம்

பெங்களூரில் அலுவலகம் திறந்த அமெரிக்க முதலீட்டு நிறுவனம்

நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாக்ஸ்டோன் நிறுவனம், 1.37 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மாற்று சொத்து மேலாண்மை மற்றும் முதலீட்டை நிர்வகிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ஸ்டோன் நிறுவனம் பெங்களூருவில் புதிய மையத்தை திறந்துள்ளது.

இந்த மையம் தனியார் முதலீட்டுச் செல்வ மேலாண்மை, கடன், காப்பீடு உள்ளிட்ட பிரிவுகளுக்கான பணிகளை செய்யும். நிறுவனத்தின் முதலீட்டுக் குழு, மும்பையில் உள்ள இந்திய தலைமையகத்திலிருந்து தொடர்ந்து செயல்படும்.

பிளாக்ஸ்டோன் நிறுவன கடன், காப்பீட்டு முதலீட்டு செயல்பாட்டுக் குழுவின் மூத்த நிர்வாக இயக்குநரான சூசன் யங், இந்த மையத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார்.

நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட பிளாக்ஸ்டோன் நிறுவனம், 1.37 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 5000 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. நாட்டின் அலுவலகங்கள், சில்லறை விற்பனை மற்றும் சரக்குப் போக்குவரத்துக் கிடங்குகள் சார்ந்த ரியல் எஸ்டேட் சொத்துகளில் மிகப்பெரிய உரிமையாளராகவும் உள்ளது.

மேலும், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளில் 5 தொடங்க உதவியுள்ளது. இந்நிறுவனத்தின் முதலீட்டில் உள்ள 14 நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தங்களின் உலகளாவிய வணிகச் செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக, கேகேஆர் அண்ட் கோ, அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் இன்க் உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் பிளாக்ஸ்டோனும் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மைக்கேல் சே கூறுகையில், "இந்தியாவில் நீண்டகாலமாக முதலீடு செய்து வரும் பிளாக்ஸ்டோன், கடந்த 20 ஆண்டாக நாட்டின் முன்னணி வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் விரிவாக்கம் இந்தியா மீதான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது" என்றார்.

வணிக நிறுவனங்களை பகுப்பாய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் நிறுவன அறிக்கையில், "கடந்த ஆண்டு இந்தியாவில் 1,800-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் இருந்தன. இந்த எண்ணிக்கை வரும் 2030-க்குள் 2,400-ஐத் தாண்டும் என்று தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
India, Liechtenstein talks on double taxation
அடுத்த செய்தி
Financial crime compliance workforce toreach 45,000 by 2030, create 19,000 jobs

தொடர்புடைய செய்திகள்